200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசல் பூட்டை உடைத்து கொள்ளை
நத்தம் புதுப்பட்டி அருகே மாம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசல் பூட்டை உடைத்து கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டி அருகே மாம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேகு பாவா பள்ளிவாசல் உள்ளது. நத்தம் ஆசாத் நகரை சேர்ந்த சிக்கந்தர் பகல் நேரத்தில் காவலாளியாக இருந்து விட்டு மாலையில் பள்ளிவாசல் கதவுகளை பூட்டி விட்டு வீடு செல்வது வழக்கம். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி வாசல் மற்றும் அதன் அருகில் உள்ள சாமான்கள் வைப்பறை உள்ளிட்டவைகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். புதன்கிழமை காலை வழக்கம்போல் பள்ளி வாசலை திறந்த போது உள்புறமாக போடப்பட்டிருந்த பூட்டு திறக்கப்பட்டிருந்தது. பள்ளி வாசல் உள்ளே இருந்த உண்டியலில் இருந்து பணம் திருடு போயிருந்தது. மேலும் பொருட்கள் வைப்பறையும் திறக்கப்பட்டிருந்ததை கண்டு காவலாளி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நத்தம் போலீசாரிடம் அளித்த புகாரையடுத்து நத்தம் போலீசார் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும், பணம் மற்றும் என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளது என்பது தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி வாசல் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.