ஆக்கர் கடையில் இருந்து 200 பழைய செல்போன்கள் பணம் திருட்டு

குளச்சல் அருகே ஆக்கர் கடையில் இருந்து 200 பழைய செல்போன்கள் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-09 16:16 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (57). இவர் குளச்சல் பீச் ரோடு சந்திப்பில் பழைய பொருட்கள் விற்கும்  ஆக்கர் கடை நடத்தி வருகிறார். சம்பவ தினம்  இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.      

மறுநாள் சென்றபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. கடையில் உள்ளே சென்று பார்த்தபோது 25 கிலோ பழைய செம்பு, பித்தளை பொருட்கள் கவரிங் நகைகள் திருடப்பட்டிருந்தன.       மேலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 200 செல்போன்களும் ஒரு ஆட்டோ பேட்டரி மற்றும் மேஜையில் இருந்த ரூபாய் 25 ஆயிரம்  பணம் ஆகியவற்றையும் காணவில்லை.      

இது குறித்து ராஜன் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து,  கைரேகை நிபுணர்கள் வந்த ஆய்வு செய்ததில் ஒரு கைரேகை சிக்கி உள்ளது.    

  அதன் பேரில் பழைய குற்றவாளிகள் பட்டியல் வைத்து விசாரணை நடத்துகிறார்கள். மேலும்  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும்  ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News