2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு திமுக சார்பில் ராசிபுரத்தில் ஆலோசனை கூட்டம்
2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு திமுக சார்பில் ராசிபுரத்தில் ஆலோசனை கூட்டம்
2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்... ஒரு காலத்தில் பெண்கள் பெரும்பாலும் ஜெயலலிதாவிற்கு தான் வாக்களித்து வந்தார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், இன்றைக்கு உள்ள பெண்கள் எல்லாம் மு.க.ஸ்டாலின் தலைவர் அவர்களுக்கு பின்னால் தான் உள்ளனர் என மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் பேச்சு. 2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு திமுக 234 தொகுதிகளிலும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து உள்ளது.இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் ராசிபுரம் நகரம்,ராசிபுரம் ஒன்றியம், வெண்ணந்தூர் ஒன்றியம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள், பிரதிநிதிகள்,கட்சி நிர்வாகிகள் என பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற பார்வையாளர் ரேகா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.. இதில் ராசிபுரம் நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், ராசிபுரம் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர்,பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, வழக்கறிஞர் செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.கே. பாலச்சந்தர்,நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே பி ராமசாமி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் கே பி ஜெகநாதன்,வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் ஆர் எம் துரைசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, பட்டணம் பேரூர் கழகச் செயலாளர் பொன். நல்லதம்பி, பொதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயக்குமார், பில்லா நல்லூர் பேரூர் கழகச் செயலாளர் சுப்பிரமணி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் பேசுகையில் ஒரு காலத்தில் பெண்கள் பெரும்பாலும் ஜெயலலிதாவிற்கு தான் வாக்களித்து வந்தார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், இன்றைக்கு உள்ள பெண்கள் எல்லாம் மு.க.ஸ்டாலின் தலைவர் அவர்களுக்கு பின்னால் தான் உள்ளனர். 35 கோடி மதிப்பீட்டில் புதிதாக டைட்டில் பார் அரசு கல்லூரி வளாகத்தில் அமையுள்ளது,அரசு கல்லூரி வளாகத்தில் ஏன் அமையுள்ளது என்பது தெரியுமா? தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கு படிக்கும் நிலையில் அவர்கள் எளிதாக பணிபுரிய வேண்டும் என்பதற்காக அரசு கல்லூரியில் அமைய உள்ளதாகவும் கூறினார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்திருந்தால் கூட்டுறவு வங்கிகள் திவால் ஆகி இருக்கும்,திமுக ஆட்சி வந்த பிறகுதான் கூட்டுறவு வங்கி மீண்டும் புத்துணர்ச்சி பெற்று விவசாயிகளுக்கு கடன் வழங்கி உள்ளதாக பேசினார்..