பொது வினியோக திட்ட குறைதீர்வு முகாமில் 229 மனுக்களுக்கு தீர்வு!

வேலூர் மாவட்டத்தில் நடந்த பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்வு முகாமில் ஒரே ஒரு மனு மட்டும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-06-18 04:15 GMT

வேலூர் மாவட்டத்தில் நடந்த பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்வு முகாமில் ஒரே ஒரு மனு மட்டும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூர் தாலுகா பென்னாத்தூர் அருகே உள்ள காட்டுபுத்தூர் பகுதியில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் 45 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோன்று காட்பாடி தாலுகா காலிவர்த்தாங்கல் பகுதியில் நடந்த முகாமில் 29 மனுக்களும், அணைக்கட்டு தாலுகா தேவிசெட்டிக்குப்பம் மதுரா ஆண்டிகொண்டாய் பகுதியில் நடந்த முகாமில் 59 மனுக்களும், குடியாத்தம் தாலுகா சேம்பள்ளி பகுதியில் நடந்த முகாமில் 42 மனுக்களும், கே.வி.குப்பம் தாலுகா காங்குப்பம் பகுதியில் நடந்த முகாமில் 21 மனுக்களும், பேரணாம்பட்டு தாலுகா பறவைக்கல் பகுதியில் நடந்த முகாமில் 33 மனுக்களும் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்த பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 229 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன.

ஒரு மனு மட்டும் பரிசீலனையில் உள்ளது. முகாமில் அதிகபட்சமாக 76 பேர் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கவும், 55 பேர் பெயர் நீக்கவும், 53 பேர் தங்களின் செல்போன் எண்ணை மாற்றவும், 27 பேர் குடும்ப தலைவர் பெயரை மாற்றவும், 17 பேர் முகவரி மாற்றவும் மனு அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News