23 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளி கைது

நீதிமன்றம் பிடி கட்டளையை நிறைவேற்றிய போலீசார்

Update: 2024-08-30 18:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடந்த 23 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற பிடி கட்டளையை நிறைவேற்றிய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளுவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1996 -ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வாக்காளர்களை ஓட்டுப்போட விடாமல் தடுத்தும் வாக்கு சீட்டுகளை கிழித்தும் குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கை.களத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில் மேற்படி வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான காரியாநூரை சேர்ந்த பெரியசாமி என்ற குற்றவாளி 2001 –ம் ஆண்டில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால் 11.04.2001 –முதல் பிடியாணை பிறப்பிக்கப்ட்டு கடந்த 23 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கை.களத்தூர் காவல்நிலைய நீதிமன்ற பெண்காவலர் திருமதி. மாலதி அவர்கள் மேற்படி குற்றவாளி பெரியசாமியை நேற்று 29.08.2024 -ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினார். பெரியசாமி 23 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த எதிரியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கை.களத்தூர் நீதிமன்ற பெண் காவலரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா வெகுவாக பாராட்டினார்.

Similar News