3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 281 போலீசார் அதிரடி மாற்றம்
திருச்சி மாநகரில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 281 போலீசார் அதிரடி மாற்றம்;

திருச்சி மாநகரில் பணியாற்றும் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 281 போலீசாரை மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டராக பணியாற்றிவந்த சண்முகவேல், காந்திமார்க்கெட் குற்றப்பி ரிவு போலீஸ் நிலையத்துக்கும், கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நிர்மலா, சைபர் கிரைம் செல் இன்ஸ்பெக்டராகவும், செசன்சு கோர்ட்டு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினவல்லி கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபோல் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள், தலைமை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் என மொத்தம் 281 பேர் தாங்கள் பணியாற் றிய போலீஸ் நிலையங்களில் இருந்து கூண்டோடு மாற்றம் செய்யப்பட் டனர்.