பைக் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம்
பைக் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 10:25 GMT
கோப்பு படம்
நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி (55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக தனது மனைவி ராஜாத்தி (45) மற்றும் பேரன் பவினேஷ் உடன் டூவீலரில் வேம்பரளிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது பரளிபுதூர் டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் அவர் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது.
இதில் டூவீலரில் சென்ற 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.