கீரம்பூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் 34-ஆவது வார்டு உறுப்பினர் இளம்பரிதி மனு
கீரம்பூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் 34-ஆவது வார்டு உறுப்பினர் வ.இளம்பரிதி மனு
நாமக்கல், செப். 21: கீரம்பூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.மகேஸ்வரிடம், 34-ஆவது வார்டு திமுக உறுப்பினர் எம்பரர் வ.இளம்பரிதி மனு அளித்தார்.
அதன் விவரம்: நாமக்கல் நகராட்சியானது, 12 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் 2008 ஆம் ஆண்டு விதிப்படி, மாநகராட்சி எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் எந்தவித சுங்கச்சாவடியும் இருக்க கூடாது. தற்போது மாநகராட்சி எல்லையான தொட்டிப்பட்டி பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கீரம்பூர் ராசாம்பாளையம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளதால் அதனை அகற்ற வேண்டும். இது தொடர்பாக, மாநகராட்சி சார்பில் கோரிக்கை மனு தயார் செய்து மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்வாயிலாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கீரம்பூர் சுங்கசாவடியை அகற்றி, நாமக்கல் மாநகராட்சி மக்கள் மட்டும் இல்லாமல், நாமக்கல் தொகுதி மற்றும் பரமத்தி வேலூர் தொகுதிக்கு உள்பட்ட மக்கள் பாதிக்கப்படாதவாறு உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.