3500 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஓனம் பண்டிகை
3500 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஓனம் பண்டிகை
15 ஆம் தேதி ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில் ஓணம் பண்டிகையின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கே எஸ் ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. மகாபலி மன்னன் ஆண்டுதோறும் கேரள மக்களை காண ஓணம் தினத்தன்று வருகை தருவார் என்பது ஐதீகம் ஆகும் அந்த நாளில் அத்த பூக்கோலம் இட்டு கேரள பாரம்பரிய முறைப்படி கேரள மக்கள் மன்னனை வரவேற்பார்கள் இதனை கல்லூரி மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 3500 க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் அத்த பூக்கோலம் இட்டு ஜெண்டை மேளத்துடன் பால்அட்ட பிரதமை இனிப்பு ஆகியவற்றை வழங்கி பாரம்பரிய கேரள உடை அணிந்து ஆண்களும் பெண்களும் நடனமாடி ஓனம் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் பத்மநாபன்,நிர்வாக இயக்குனர் மோகன், முதன்மை திட்ட அலுவலர் பாலுசாமி, மாணவர் திறன் மேம்பாட்டு இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்