நெடுங்கூரில் நான்கு பேர் கைது

நெடுங்கூரில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-27 13:41 GMT

கோப்பு படம்

கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 26 ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில், நெடுங்கூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகிலுள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறை, தெற்கு தெருவை சேர்ந்த இசைவாணன், அருகில் உள்ள தரகம்பட்டியைச் சேர்ந்த கபிலன், க. பரமத்தி, பெரியார் நகரை சேர்ந்த மனோகரன், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ஐயும் பறிமுதல் செய்தனர். நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News