40 ஆண்டு தொடக்க பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

பரமத்தி வேலூரில் 40 ஆண்டு தொடக்க பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-09-16 13:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1985 -1986 ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை முடித்த முன்னாள் மாணவ மாணவிகளின் சந்திப்பு 15 ஆம் தேதி பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள முத்து மீனாட்சி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு முன்னாள் ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தினார்கள். மேலும் தற்பொழுது ஆசிரியர்களாக உள்ளவர்களையும் வரவழைத்து நினைவுப் பரிசுகள் வழங்கி மரியாதை செய்தனர். நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது பள்ளிக் கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் முன்னாள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களது குழந்தைகளுக்கு வழிகாட்டும் அறிவுரைகளையும் வழங்கினார்கள். அனைவருக்கும் மதிய விருந்தும் தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளி சீரமைப்புக்காக நிதி உதவியும் வழங்கப்பட்டது.

Similar News