40  விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கிய வேளாண்மைத்துறையினர்

வேளாண்மைத்துறையினர் சார்பில் 40  விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்டன.;

Update: 2025-08-10 12:06 GMT
வேளாண்மைத்துறையினர் சார்பில் 40  விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்டன. இது குறித்து துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி கூறியதாவது: தேசிய வேளாண்மை திட்டம் , தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து, மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் நிதி அமைப்பின் கீழ், ஒரு பண்ணையம் அமைக்கும் நோக்கில், பள்ளிபாளையம் வட்டார விவசாயிகள் 40 பேருக்கு கால்நடைகள் மானிய  விலையில் வழங்கப்பட்டன. இதில் 38 விவசாயிகளுக்கு கறவை மாடுகளும், இரண்டு நபர்களுக்கு ஆடுகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 30 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டன. இதில் 22 ஆயிரம் ரூபாய் கால்நடைகளுக்கும். மீதி 8 ஆயிரம் ரூபாய்க்கு, மண் புழு உரத்தொட்டி, மண் புழுக்கள், பழச்செடிகள் ஆகியன வழங்கப்பட்டன. கால்நடையின் விலையில், 22 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதில்  வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார், வேளாண்மை அலுவலர் கிருத்திகா, உதவி அலுவலர்கள் நிஷா, விஷ்ணுபிரியா, ரம்யா, சீனிவாசன், துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News