நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணியினர் அவசர காலத்திற்கு ரத்ததானம் வழங்குவதில் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனியார் ரத்த வங்கியில் 21 யூனிட்டும், அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் 26 யூனிட்டும் என மொத்தம் 47 யூனிட் ரத்தம் வழங்கி உள்ளதாக மருத்துவ சேவை அணியினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.