51வது வார்டு பகுதியில் மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 51வது வார்டு பகுதியில் மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 20) ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது குழந்தைகள் விளையாடும் பூங்கா, நியாய விலை கடை குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொழுது துணை மேயர் ராஜு, 51வது வார்டு கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.