60 லட்சம் மதிப்பிலான 2250 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கொம்புத்துறை கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 60 லட்சம் மதிப்பிலான 68 மூடைகளில் இருந்த 2250 கிலோ பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஈச்சர் லாரி பறிமுதல் க்யூ பிரிவு நடவடிக்கை;
தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள், அழகு சாதன பொருட்கள், மாத்திரைகள் உள்ளிட்டவை எந்தவித ஆவணங்கள் இல்லாமல் படகுகள் மூலம் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது இதை தொடர்ந்து இதை தடுக்கும் நடவடிக்கையில் க்யூ பிரிவு காவல் துறையினர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கொம்புத்துறை கடற்கரை பகுதி வழியாக படகுமூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து விஜய அனிதா தலைமையிலான காவல்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான 68 மூடைகளில் இருந்த 2250 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து கடத்தப்பட இருந்த பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஈச்சர் லாரியையும் க்யூ பிரிவு காவல்துறையினர்பறிமுதல் செய்தனர் மேலும் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை சுங்க இளக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது