மொபைல் கடைகாரரிடம் இருந்து 63 ஆயிரம் பறிமுதல்
விருதுநகரில் கடனை அடைக்க சென்ற மொபைல் கடைகாரரிடம் ரூ.63,510 பணத்தை செய்த தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள வெள்ளையாபுரம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் சுந்தரமூர்த்தி வயது (34. ) இவர் அதே ஊரில் மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த முறை மொபைல் விற்பனைக செய்வதற்காக தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனை தற்பொழுது அந்த கடனை அடைப்பதற்காக தான் உண்டியல் சேர்த்து வைத்திருந்த பணத்துடன் கடன் கொடுத்த தனியார் நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை ஆய்வு குழுவினர் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் விளக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சுந்தரமூர்த்தி வாகனத்தை சோதனை செய்த போது அவரது வாகனத்தில் 63,510 ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் லோகநாதனிடம் ஒப்படைத்தனர். பின்னர் லோகநாதன் முன்னிலையில் பணத்தை சீல் வைக்கப்பட்டு சார் நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.