78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா.

78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா.

Update: 2024-08-15 15:54 GMT
78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா. நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆணையர் சுதா, நகர் நல அலுவலர் இலட்சியவர்ணன், கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா, மாநகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சியின் போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்கள், தாமாக முன்வந்து மாநகராட்சி வளர்ச்சியில் பங்கேற்று, முறையாக வரி செலுத்திய 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதே போல சிறப்பாக பணியாற்றிய தீயணைப்புத்துறையினருக்கும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Similar News