சாலையோரம் சாய்ந்து கிடக்கும் ஆலமரம் : விபத்து அபாயம்!

பேய்குளத்தின் அருகே சாய்ந்து கிடக்கும் ஆலமரத்தை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-08 04:45 GMT

ஆலமரங்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு சொந்தமான பேய்குளம் குளத்தின் அருகே நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் உள்ள ஆலமரங்கள் பேரிடர் வெள்ளச்சேதம் காரணமாக 2023ம் ஆண்டும் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு அபாய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆலமரத்தை அகற்றினால்தான் சாலை அமைப்போம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. மேலும் வனத்துறையால் திட்ட மதிப்பீடும் ஆலமரத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மரம் அகற்றபடவில்லை. இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின்ஜெனிட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News