செய்யாறு அருகே மொபட் மீது கார் மோதி விபத்து
செய்யாறு அருகே மொபட் மீது கார் மோதிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Update: 2024-04-21 11:18 GMT
திருவண்ணாமலை மாவட்டம். செய்யாறு அடுத்த பைரவபுரம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது 45) மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது வடஇலுப்பை கூட்ரோடு சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது கார் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனுசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து மோரணம் காவல் நிலைய போலீசார் ,ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.