நகர மன்ற கூட்டத்தில் 3 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் ஒப்புதல்
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகரில் ரூ. 3 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
Update: 2024-03-01 10:53 GMT
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் வரவேற்று பேசினார். தர்மபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் சாலைப் பணிகள், சிறு பாலம் அமைத்தல், சமுதாயக்கூடம் சீரமைத்தல், குடிநீர் குழாய்கள் சீரமைத்தல் கழிப்பிடங்கள் சீரமைத்தல், சாக்கடை கால்வாய்கள் அமைத்தல்உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ரூ 3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட 51 பொருட்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், தர்மபுரி நகரில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களையும் தூர்வார வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் தெரிவித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் மாதையன், மேலாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சுசீந்திரன், ரமண சரண் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.