ஆட்சியர் அலுவலகத்திற்கு நெல்பயிர்களுடன் வந்த விவசாயி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேவுள்ள மஞ்சநாய்க்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இருவர் நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த விவசாயிகள். இது குறித்து விவசாயிகள் கூறும்போது தங்களது கிராமமான புதுப்பட்டி வருகூரான் கொட்டாய் கிராமத்தில் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி செல்லும் வழியில் தடுப்பணை ஒன்று இருந்து வந்தாதகவும், மழை காலங்களில் அந்த தடுப்பணை நிரம்பும் போது சுற்றுவட்டார பகுதி விவசாயத்திற்கு பயனுள்ளதாகவும்,
தவிர சுற்றுப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்வதால் தங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக தடுப்பணை இருந்து வந்தது, இந்த தடுப்பணை மற்றும் தடுப்பணை கால்வாய்களை அதே ஊரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மனைவி வெண்ணிலா ஆகியோர் தனிபட்ட சுய லாபத்திற்காக சமீபத்தில் தடுப்பணையை உடைத்து சேதபடுத்தி ஆக்கரமிப்பு செய்துவிட்டதால், தங்களது விவசாயம் அடியோடு அழிந்து வருவதாகவும், நீர் ஆதாரமும் கேள்வி குறியாகிவிட்டதாக தெரிவிக்கும் விவசாயிகள்,
தடுப்பணை மற்றும் தடுப்பணை கால்வாய்களை உடைத்து ஆக்கிரத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் பயன் பெறும் வகையில் மீண்டும் தடுப்பணையினை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை, இதற்காகவே தண்ணீரின்றி வாடி வரும் நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். தடுப்பணை ஆக்கிரமிப்பு குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்,
வட்டாச்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு முறையாக தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருவதால், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருப்பதாகவும், தங்களது கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஒன்று திரண்டு போரட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.