வாலாஜாபாத் அருகே இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு

வாலாஜாபாத் வட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் விவசாய பணிக்காக நிலத்துக்கு இரவு சென்ற விவசாயி இடி தக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Update: 2024-06-07 14:54 GMT

பலியான விவசாயி

காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அவ்வகையில் நேற்று மாலை 3 மணி முதலே கருமேகம் சூழ்ந்து மெல்ல மெல்ல சாரல் மழையாக துவங்கி மாலை 5 மணி வரை கனமழை பெய்தது.

அதனைத் தொடர்ந்து அவ்வப்போது கனமழையும் லேசான மழையும் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளாக காஞ்சிபுரம் உத்தரமேரூர் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் பல இடங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை மழை நீடித்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரத்தில் 33 மில்லி மீட்டரும் , உத்தரமேரூரில் 13 மில்லி மீட்டரும் ,

வாலாஜாபாத்தில் 89 மில்லி மீட்டரும் , ஸ்ரீபெரும்புதூரில் 29 மில்லி மீட்டரும் , குன்றத்தூரில் 22 மில்லிமீட்டரும் , சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் பகுதியில் மில்லி மீட்டர் 14 என மொத்தம் 200.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் சராசரி மழை பதிவாக 33.4 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வாலாஜாபாத்தில்,

அதிக கன மழை பெய்த நிலையில் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற விவசாயி தனது விவசாய நிலத்திற்கு சென்றிருந்தபோது இரவு 9 மணி அளவில் இடி தாக்கி விவசாய நிலத்தில் மயங்கி விழுந்தார். உடன் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் எடுத்து வந்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவ பரிசோதனை தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஒரகடம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைத்துள்ளனர். இடி தக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News