அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து

உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர் அருகே சாலை குறுகி இருந்த நிலையில்அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து

Update: 2024-01-22 06:17 GMT

 அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து

உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஒரு கிலோமீட்டர் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்லும் அவல நிலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகிய சாலையாக காணப்பட்டு வருகிறது மேலும் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் அரசு அதிகாரிகளும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறி வரும் நிலையில் ஏதாவது சிறு விபத்து ஏற்பட்டாலும் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 3 மணி நேரம் 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகிறது இதுவே போல் இன்று கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக சென்ற அரசு பேருந்தும் கீழப்புதூரிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த ஆட்டோ கண்ணன் தியேட்டர் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது இதில் ஆட்டோ டிரைவருக்கு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் மேலும் இந்த சிறு விபத்தால் வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றது இதனால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழலில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் சிறு விபத்தாக இருந்தாலும் பெரும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது தமிழக அரசும் நெடுஞ்சாலை துறையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை உசிலம்பட்டி பகுதிகளில் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News