குமரி அருகே சிற்றார் சிலோன் காலனியில் சிக்கிய சிறுத்தை குட்டி

குமரி மாவட்டம் சிற்றார் சிலோன் காலனி பகுதியில் சிறுத்தை குட்டி சிக்கியது.

Update: 2024-02-01 08:48 GMT
சிறுத்தை குட்டி

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியான  சிலோன் காலனி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வரிசையாக ஏழு வீடுகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்பு உள்ளது.    

தொழிலாளர் குடியிருப்பில் தங்கி உள்ள ஒருவர் இன்று காலை கழிப்பறைக்கு செல்வதற்காக வெளியே வந்தார். அப்போது கழிப்பறை அருகே சிறுத்தை ஒன்று நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து,  பயந்து கூச்சலிட்டார். சிறுத்தையும் அவரை கண்டு பயந்து நடுங்கியது.

     இதற்கிடையில்  சிறுத்தை கழிப்பறை அருகே விறகுகளை அடுக்கி வைக்கும் கொட்டைகள் புகுந்தது. சிறுத்தை அவசரத்தில் தாவி சென்றதால் அந்த கொட்டையில் போடப்பட்டிருந்த தார்ப்பாயில் வசமாக சிக்கியது.       இது குறித்து களியல் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வனத்துறை அலுவலர் முகைதீன் தலைமையிலான வனத்துறையினர் வந்து தார்ப்பாயில் சிக்கி இருந்த சிறுத்தையை மீட்டனர்.       தொடர்ந்து நாகர்கோவில் தலைமை வனத்துறை அலுவலகத்துக்கு  கொண்டு சென்றனர்.    

 இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், - பிடிபட்டது  4 மாத சிறுத்தை குட்டி என தெரிய வந்தது. மிகவும் சோர்வாக இருந்ததாக வனத்துறையினர் கூறினர். பொதுவாக சிறுத்தைகள் மிக ஆக்ரோஷமாக இருக்கும். பிடிக்க சென்றால் பாயும். ஆனால் இந்த சிறுத்தை குட்டி சோர்வாக இருந்ததால் தான் மக்கள் யாரையும் தாக்கவில்லை. என கூறினார்.

Tags:    

Similar News