திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவப்பட்ட 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா போட்டி சீர்காழியில் டிச.27ம்தேதி நடைபெற உள்ளது.
. அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை 01.01.2000 அன்று முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வெள்ளி விழா நிகழ்ச்சி; 23.12.2024 முதல் 31.12.2024 வரை கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க பேச்சுப்போட்டி, வினாடி வினா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. வருகின்ற டிசம்பர் 26 காலை 10.30 மணிக்கு பேச்சுப்போட்டி, டிசம்பர் 27 காலை 10.30 மணிக்கு வினாடி வினா போட்டி மற்றும் டிசம்பர் 30 காலை 10.30 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் சீர்காழி முழு நேர கிளை நூலகத்தில் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகர்களும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் கலந்துகொள்ளலாம். பேச்சுப்போட்டியில் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் திருக்குறளில் ஏதேனும் 5 அதிகாரங்களில் குழந்தைகள் பொருள் உணர்ந்து உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் சீர்காழி முழு நேர கிளை நூலகத்தில் நேரிலோ அல்லது 9443308485 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 9150658877 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறுபவர்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5000ஃ- ரூ.3000ஃ- மற்றும் ரூ.2000ஃ- பரிசுத் தொகை 31.12.2024 அன்று சீர்காழி முழு நேர கிளை நூலகத்தில்; நடைபெறும் இவ்வெள்ளி விழா நிறைவு நாள் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.