திமுக செயற்குழு மற்றும் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது
திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது;
Update: 2023-12-14 02:29 GMT
திமுக செயற்குழு மற்றும் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய திமுக வின் செயற்குழு மற்றும் பாக முகவர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன் தலைமையில் சங்கரன்கோவிலில் திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல,சரவணன், பாக முகவர்களின் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் திமுக பொதுக்குழு உறுப்பினர் மாரிச்சாமி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.