நெடுங்கல் பகுதியில் பால் வாகனம் தென்னை மரத்தில் மோதி விபத்து
நெடுங்கல் பகுதியில் பால் வாகனம் தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளனதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-25 09:16 GMT
நெடுங்கல் பகுதியில் பால் வாகனம் தென்னை மரத்தில் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள நெடுங்கல் பகுதி உள்ள பெரிய ஏரிக்கரை பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் காவேரிப்பட்டினம் பகுதியிலிருந்து அரசம்பட்டி பகுதிக்கு பால் ஏற்றி சென்ற லாரி நெடுங்கள் ஏரிக்கரை பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்த்தினார் இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டினம் காவல்துறையினர் சம்பவ பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்