திருப்போரூர் முருகர் கோவிலில் சிறுவனை கடித்த குரங்கு

திருப்போரூர் முருகர் கோவிலில் குரங்கு கடித்ததில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2024-03-08 08:02 GMT
கோயில் வளாகத்தில் குரங்குகள் 
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். நேற்று, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியை சேர்ந்த யுவராஜ்- - நர்மதா தம்பதி, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கு, அவர்களின் மகன் மித்னேஷ், 8, என்ற சிறுவனின் இடது கால் பகுதியை கடித்துவிட்டு தப்பியது. சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் குரங்கை துரத்தி விட்டு, சிறுவனை மீட்டு, அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: கோவில் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. குழுக்களாக உட்கார்ந்து கொண்டு, பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. ஆகையால், குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். அப்போது தான் பக்தர்கள் நிம்மதியாக கோவிலுக்கு வந்து செல்ல முடியும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News