திருவாரூரில் நிரல் திருவிழா ஒரு நாள் பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது
திருவாரூரில் நிழல் திருவிழா ஒரு நாள் பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது
Update: 2023-12-16 06:04 GMT
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் நிரல் திருவிழா உயர்கல்வி பயிலும் மாணவர்களை வழி நடத்துனர்களுக்கான ஒருநாள் பயிற்சி பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட முதன்மை பயிற்றுனர் சித்ரா இப்பயிற்சியினை நடத்தினார். நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 87 கல்வி நிறுவன மாணவ வழி நடத்துனர்கள் பங்கு பெற்று பயிற்சி பெற்றனர் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் செந்தில்குமாரி, சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.