நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று உடல் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மனசாட்சி நட்பு கரங்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த என்.சிவராஜா, அவரது மனைவி எஸ்.பவதாரணி, நாலுவேதபதியை சேர்ந்த கோ.பழனிவேல், அவரது மனைவி ப.சுமதி, நாகையை சேர்ந்த ரமணராம், அவரது மனைவி ஆர்.திலகவதி மற்றும் எம்.கே.அண்ணாமலை. வானவன் மகாதேவியை சேர்ந்த கோ.ராஜேந்திரன் ஆகிய 8 பேர் உடல் தானம் வழங்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சரோஜினி சான்றிதழ்களை வழங்கினார். கண்காணிப்பாளர் மருத்துவர் காதர் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், மனசாட்சி நட்பு கரங்கள் அறக்கட்டளை மாநில மகளிர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ஜோதிலதா, டெல்டா மண்டல மேலிட பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.