வாழைக்குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்.
வாழைக்குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர், டிச.21 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வாழைக்குறிச்சி கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளரும தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தெருமுனை பிரச்சார பொது கூட்டம் . தா.பழூர் ஒன்றிய செயலாளரும் ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏவுமான க.சொ..க. கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளருமான கலாசுந்தரமூர்த்தி, லயோலா ராஜசேகர். தலைமை கழக இளம் பேச்சாளர் தாரணி , திமுக சட்ட திட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் குலோத்துங்கன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்,ஒன்றிய குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட அமைப்பு சாரா அணி துணைத்தலைவர் பழ.புனிதவேல், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், துணைச் செயலாளர்கள் க.சாமிதுரை, இராஜேந்திரன், இந்துமதி நடராஜன், ஒன்றிய பொருளாளர் த.நாகராஜன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன்,கோவி.சீனிவாசன், சிகண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் இரா.சங்கர், த.சம்பந்தம், த.குணசீலன்,முனைவர் மு.முருகானந்தம், க.நளராசன்,அ.தங்கபிரகாசம், எழிலரசி அர்ச்சுனன் மற்றும் கிளை செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆர் விஜயராகவதுரை நன்றி கூறினார்.