ஓசூர் போட்டோ வீடியோகிராபர் அசோசியேஷன் கூட்டம்.
ஓசூர்: போட்டோ வீடியோகிராபர் அசோசியேஷன் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்போட்டோ வீடியோ கிராபர்ஸ் அசோசியேசன் கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் மாதையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நலிவடைந்து வரும் புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.