இயற்கை எழில் கொஞ்சும் பகுதி அழிவை நோக்கி நகர்வு
அதிக அளவில் லஞ்சத்தால் அழிவை நோக்கி செல்லும் கொடைக்கானல்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 11:12 GMT
இயற்கை எழில் கொஞ்சும் பகுதி அழிவை நோக்கி நகர்வு
கொடைக்கானல் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு பல செயல்களுக்கு உடந்தையாக இருப்பதால் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி அழிவை நோக்கி செல்கிறது. லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் ஆதரவு கரம் நீட்டுவதால் ஆழ்துளை கிணறு அமைத்து மலைகளைக் குடைந்து அழிவை நோக்கி செல்லும் நிலையில் கொடைக்கானல் உள்ளது .இன்று மாலை மேல்மலை பகுதியான கவுஞ்சி பகுதியில் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் உறவினர் என்று கூறி அரசு அனுமதியில்லாமல் தனியார் தங்கும் விடுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறுகிறது.அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் பல இடங்களில் இந்த விதிமுறை மீறப்படுகிறது.