கார் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து
கார் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதி மூன்று பேர் காயம்
Update: 2023-12-17 04:32 GMT
திருவாரூர் அருகே முகந்தனூர் பகுதியில் பொறையார் பகுதியைச் சேர்ந்த பாலாஜி கார்த்திகேயன் (37). இவர் தனது காரில் சபரிமலை சென்று திரும்பிய போது காரைக்காலில் இருந்து நிலக்கரியேற்றி வந்த லாரி கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த பாலாஜி கார்த்திகேயன், மகள் ஜனமிதுன்யா மற்றும் நண்பர் ராஜ்குமார் ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் மூன்று பேரையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவக்குமார் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.