மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் திருப்பம் !

கை, கால்கள் கட்டப்பட்டு பெண் மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம் - உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை, பணம் திருடிய கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-16 06:50 GMT

கைது

கை, கால்கள் கட்டப்பட்டு பெண் மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம் - உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை, பணம் திருடிய கள்ளக்காதல் ஜோடி கைது. மதுரை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பார்வை மாற்றுத் திறனாளி பெண் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பமாக இறந்த பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வந்த கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுகிறது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை பணத்தை கொள்ளையடித்து கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம். மதுரை சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கிமங்கலம் அன்னைசத்யா நகர் பார்வையற்றோர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் டேனியல் ஆறுமுகம் மனைவி சத்யா (50) இத்தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கவிதாவின் கணவர் உடல்நலக் குறைவால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மகள் கவிதா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதால் விடுதியில் தங்கி தற்போது பொதுத்தேர்வு எழுதி வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த கவிதா மர்ம நபர்களால் கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி பொத்தியும் துணியால் கழுத்தை நெறித்தும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் கவிதாவின் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பெயரில் சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இறந்த பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா.? அல்லது வேறு ஏதும் காரணமா.? என விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கவிதாவின் எதிர் வீட்டில் வசித்து வந்த 24 வயது சிவானந்தம் என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவானந்தத்தின் வாக்கு மூலம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. சிவானந்தம் அளித்த வாக்குமூலத்தில் தனக்கும் கவிதாவின் வீட்டின் அருகே வசித்து வரும் கலையரசி 30 என்ற திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பல நாட்களாக உல்லாசம் அனுபவித்து வருவதாகவும்., இந்நிலையில் கவிதா பார்வையற்ற பெண்ணாக உள்ள கவிதா வீட்டில் அதிகளவு நகை., பணம் வைத்திருப்பதை அறிந்து அதை கொள்ளை அடித்து இருவரும் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டோம். அதனால் திங்கட்கிழமை நள்ளிரவில் கவிதா வீட்டுக்குள் கலையரசியும்., நானும் சென்று கவிதாவின் கை, கால்களை கட்டி போட்டு கொள்ளையடிக்க முற்பட்டபோது கவிதா கூச்சலிட்டதால் அவரது சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க வாயில் துணியை திணித்ததாகவும்., நாங்கள் கொண்டு வந்த துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வீட்டின் பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கலையரசியையும் கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பார்வை மாற்றுத் திறனாளி கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே., தந்தை உயிரிழந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்ட நிலையில் யாருடைய ஆதரவும் இன்றி கவிதாவின் 17 வயது மகள் தவித்து வரும் காட்சி அப்பகுதியில் இருப்பவர்களிடம் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த அடிப்படை போலீஸ் ஆர்யம் சிலைமான் காவல் நிலைய போலீசாரையும் மாவட்ட எஸ்பி அரவிந்தன் பாராட்டினார்.
Tags:    

Similar News