இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்து!
இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Update: 2024-04-02 15:58 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கும்மங்குடி பகுதியைச் சேர்ந்த சின்னகருப்பன் மகன் செம்புலிங்கம் (25) செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் திடீரென நிலை தடுமாறி தூசி கிராமம் அருகே சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் செம்புலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.