வன சோதனைசாவடி இரும்பு கம்பியை சர்வசாதாரணமாக உடைத்து சென்ற காட்டெருமை.

Update: 2023-11-10 07:18 GMT

காட்டெருமை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து முதுமலை செல்லக்கூடிய கல்லட்டி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இதனால் இப்பகுதியில் வன விலங்குகள் அதிகமாக காணப்படும். குறிப்பாக கல்லட்டி சோதனைச் சாவடி அருகே யானை, கரடி, சிறுத்தை, கடாமான்கள், காட்டெருமைகள் என வன விலங்குகள் முகாமிட்டு உலா வருகின்றன. இந்நிலையில் கல்லட்டி மலைப்பாதையிலுள்ள வனத்துறை சோதனை சாவடி இரவு நேரத்தில் அடைக்கப்படுவது வழக்கம். அப்படி சோதனை சாவடி அடைக்கப்பட்ட பின்பு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டெருமை மெதுவாக உலா வந்தது சோதனைச் சாவடி அடைக்கப்பட்டு இருந்ததால் தனக்கு கிடைத்த "சைக்கிள் கேப்பில்" திடீரென இரும்பு கம்பியை உடைத்து ஓடியது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

Similar News