வேலி தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

Update: 2023-12-22 00:53 GMT
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெருமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் சத்யகலா வயது 38 . இவர் தான் வாங்கிய நிலத்தை பத்திர பதிவு செய்து தற்போது கம்பி வேலி அமைத்த போது அந்த இடத்தினை ராம்கி என்கிற கார்த்திக் வயது 26 தனது தாயார் இடம் எனக் கூறி மது போதையில் சத்தியகலா வீட்டிற்கு சென்று திட்டியும் ,வேலிகளை சேதப்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது . இது குறித்து சத்தியகலா குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து ராம்கி என்கிற கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News