இறப்பு நிகழ்ச்சியில் விபத்து :காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த ஆட்சியர்
ராணிப்பேட்டை அருகே இறப்பு நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த போது பலருக்கு காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 08:57 GMT
ராணிப்பேட்டை அருகே உள்ள சந்தைமேடு பட்டாணிக்கார சந்து பகுதியில் வசித்து வந்த சரஸ்வதி என்ற மூதாட்டி இறப்பு நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தபோது பட்டாசு தீ அருகில் இருந்த பட்டாசுகளின் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டது.
இதில் காயப்பட்ட ரமேஷ் பாபு 40, சரவணன் 51, கோடீஸ்வரன் 40, சரவணன் 40, கஸ்தூரி 55, வேண்டா மணி 61, பிரேமா 50, பாரதி 46, பரமேஸ்வரி 65, பார்த்திபன் 28 ஆகிய 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் வருபவர்களை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.