உளுந்தூர்பேட்டை அருகே விபத்து- 6 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபகத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.;

Update: 2024-05-17 04:57 GMT

விபத்து

உளுந்துார்பேட்டை அருகே கார் டயர் வெடித்து, ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர். ஹைதராபாத் அடுத்த நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளார். நேற்று காலை திருவண்ணாமலை சென்றனர். பின், சிதம்பரம் நடராஜர் கோவில் செல்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் வழியாக எலவனாசூர்கோட்டை நோக்கி மாருதி சுசுகி காரில் வந்து கொண்டிருந்தனர்.

Advertisement

மதியம் 2:30 மணியளவில் உளுந்துார்பேட்டை தாலுகா வீரமங்கலம் அருகே வந்தபோது காரின் முன் வலது பக்க டயர் வெடித்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது எலவனாசூர்கோட்டையில் இருந்து எறையூர் நோக்கி, புகைப்பட்டியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது மோதிய கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த எறையூர் ஏசுதாஸ் மகள் யூனோ ஏஞ்சல் 6; அந்தோணி கிரேசி, 26; கூவாடு ஏழுமலை மனைவி செல்வி, 42; புகைப்பட்டி ராமசாமி மனைவி வள்ளி, 55; ராமசாமி, 60; பாளையம்குஞ்சரம் முகமதுஅலி மனைவி மஜராபிபி, 41; ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். காரில் ஏர் பலுான் விரிந்ததால், பயணித்த வேணுகோபால், அவரது மனைவி வசந்தி, மகள் லாஷியா, 17; மகன்கள் சுப்புராஜா, 15; ராகவா, 12; ஆகிய 5 பேரும் காயமின்றி தப்பினர்.

Tags:    

Similar News