திண்டுக்கல் அருகே யானைத்தந்தம் திருடியதாக வனச்சரகர் மீது நடவடிக்கை

திண்டுக்கல் அருகே யானைத்தந்தம் திருடியதாக வனச்சரகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-28 13:52 GMT

திருடப்பட்ட யானை தந்தம்

திண்டுக்கல் அருகே யானைத்தந்தம் திருடியதாக வனச்சரகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி வனச்சரகர் கோகுல கண்ணன் மீது புளியமரத்து செட் வனப்பகுதியில் யானைதந்தம் திருட்டு தொடர்பாக துறை ரீதியான 17 B பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர் மீது மட்டுமல்லாமல் பழனி வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றும் வனவர் உள்ளிட்ட ஐந்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் வன பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News