ஆரணி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

ஆரணி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-09 15:42 GMT

ஆய்வு செய்யும் அதிகாரிகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் ரிஷப் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.வி.நகரம், பனையூர், சேவூர், மேற்கு ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த முள்ளிப்பட்டு, 5 புத்தூர், அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டபணிகள், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சிமென்ட் சாலை, தார்ச் சாலை, ஊராட்சிமன்ற கட்டடம் கட்டும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.5 கோடியிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆய்வு செய்தார். ஆ

ய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி. பிரபாகரன், ஸ்ரீதர், பால முருகன், உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், உதவிப்பொறியாளர் ஜெயலட்சுமி, பணிமேற் பார்வையாளர்கள் ஜோதி, வெங்கடேசன், சீனிவாசன் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News