தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மாணவர் சேர்க்கை  

தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-08 10:24 GMT
தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை

தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் 2019ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த முதுகலை வரலாற்றுப் பாடம் நடைபெற்று வருகிறது. 

50 இருக்கைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 57 மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தனர். இவற்றுள் இனவாரி சுழற்சி முறையிலும் மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பெற்று அதற்கான சேர்க்கை ஜூன்.7 வெள்ளிக்கிழமை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக் கூடத்தில் நடைபெற்றது. 

நேர்காணலில் பங்கேற்று தேர்வு செய்யப் பெற்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், சேர்க்கைக்கான அனுமதிப் படிவத்தை வழங்கிப் பேசினார். 

பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன், சுவடிப்புலத் தலைவர் பேராசிரியர் த.கண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன், சேர்க்கைப்பிரிவு கண்காணிப்பாளர் தே.ரேவதி, அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை தலைவர் முனைவர் ஆ.துளசேந்திரன், துறையின் பேராசிரியர் முனைவர் மா.பவானி, அருங்காட்சியக இயக்குநர் முனைவர் ஆ.ராசா, முனைவர் கு.மூகாம்பிகை ஆகியோர் விண்ணப்பங்களை சரிபார்த்து மாணவர் சேர்க்கையை வழி நடத்தினர்.

Tags:    

Similar News