அதிமுக கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை அழித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் பொள்ளாச்சி சார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பாளர் கார்த்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடன் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் தாமோதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.