முதல்வர் ஸ்டா லின் பதவி விலகக் கோரி போராட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பதவி விலகக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-24 11:54 GMT

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிமுகவினர் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி கள்ள சாராய இறப்பிற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி விலகக் கோரி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அவைத் தலைவர் பி.வி பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பதவி விலக கோரியும் கள்ள சாராய விற்பனைக்கு துணை போகும் கள்ளக்குறிச்சி திமுக மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கண்டனம் தெரிவித்து 700க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News