முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலகாததை கண்டித்து ஊட்டியில் அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-24 12:10 GMT

அதிமுக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகாத முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜூணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி விஷசாராயம் உயிரிழப்புகளுக்கு மாநில அரசும், போலீஸாரும் பொறுப்பேற்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மது விலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாணவரணி மாநில துணை செயலாளர் பால நந்தகுமார், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News