அதிமுக 40தொகுதிகளிலும் தோற்கும்; அமமுக ஆருடம்

மயிலாடுதுறையில் நடந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அதிமுக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என வலியுறுத்தப்பட்டது.

Update: 2024-03-12 17:15 GMT

மயிலாடுதுறையில் நடந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அதிமுக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என வலியுறுத்தப்பட்டது. 

மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பொன்.பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில மாணவரணி துணை செயலாளர் சுதாகர், தலைமை கழக பேச்சாளர் கோமல் கிட்டு மாவட்ட அவை தலைவர் சாதிக் பாஷா, உள்ளிட்ட பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியில் துணை பொது செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தஞ்சை என்.ரங்கசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், அ.ம.மு.க. நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஒரு சிறந்த கூட்டணியை நமது இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் நமது இலக்கை எட்ட முடியும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும். அப்போது பரவலாக எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு அடித்தளமாக கிளை அளவில் கட்சியின் பலப்படுத்தி, பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் நம் கட்சியை யாராலும் அசைக்க முடியாது. எடப்பாடி தலைமையிலான அதிமுக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். துரோகம் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் இல்லை என்றார்.

Tags:    

Similar News