குரும்பப்பட்டி பூங்காவில் 6 ஆமைகள் தத்தெடுப்பு
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் குரும்பப்பட்டி பூங்காவில் 6 ஆமைகள் தத்தெடுப்பு
By : King 24x7 Website
Update: 2023-12-13 03:34 GMT
வனவிலங்குகள் பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தடய அறிவியல் பிரிவு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள 6 இந்திய நட்சத்திர ஆமைகளை தத்தெடுக்க பல்கலைக்கழக வேந்தர் கணேசன் அறிவுறுத்தினார். அதன்பேரில் பூங்காவில் அந்த ஆமைகள் தத்தெடுக்கப்படும் நிகழ்ச்சியும், தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் பங்கேற்றார். துறையின் தடய அறிவியல் பிரிவின் மூலம் உதவி வன பாதுகாவலர் முன்னிலையில் 6 இந்திய ஆமைகள் 3 மாதங்களுக்கு தத்தெடுக்கப்பட்டன. மேலும் இந்த மாதத்தை சிறப்பிக்கும் வகையில் உயிரியல் பூங்காவில் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதில் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பூங்காவில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் தடய அறிவியல் பிரிவின் பொறுப்பாளர் மோகன், உதவி பேராசிரியர்கள் லின்சி, சாண்ட்ரா, ராஜஸ்ரீ, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தனசேகர், டாக்டர் ஜெயபாலன் மற்றும் மெய்பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.