ஆரணி கோட்டாட்சியரிடம் வழக்குரைஞர் சங்கத்தினர் மனு

ஆரணியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்திற்கு தவறுதலாக வழங்கப்பட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்யக் கோரி, வழக்குரைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.;

Update: 2023-12-16 07:29 GMT

 ஆரணியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்திற்கு தவறுதலாக வழங்கப்பட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்யக் கோரி, வழக்குரைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்திற்கு தவறுதலாக வழங்கப்பட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்யக் கோரி கோட்டாட்சியர் எம். தனலட்சுமியிடம் வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வழக்குரைஞர் சங்கத்திற்கு இடம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்திற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்திற்கு தவறுதலாக பட்டா வழங்கப்பட்டது. அந்த இடமானது பொதுப் பணித் துறை கண்காணிப்பில் உள்ளது.

Advertisement

தற்போது, ஆரணிக்கு கூடுதல் நீதிமன்றங்கள் வர உள்ள நிலையில் அதற்கான இடம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வழக்குரைஞர் சங்கத்திற்கு கடிதம் வந்துள்ளது. அதன், அடிப்படையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் துக்கு தவறுதலாக வழங்கப்பட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. நிகழ்வில், அரசு வழக்குரைஞர்கே.ராஜமூர்த்தி, வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர் ஏ. சிகா மணி, சங்க செயலாளர் தணிகாச லம், பொருளாளர் மதன்குமார், நிர்வாகிகள் நீலகண்டன், குமார சாமி, சண்முகம், கோபி, அசோக் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News