அகஸ்தீஸ்வரம் ரெயில்வே கேட் 30 நாட்களுக்கு மூடல்
Update: 2023-11-23 07:08 GMT
கன்னியாகுமரி முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரெயில் பாதை பணிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இந்த இரட்டை ரெயில் பாதை பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் சுக்குபாறைதேரி விளை ரெயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக 21-ந் தேதி மாலை 4.30 மணி அடைக்ககப்பட்டது. இந்த கேட் அடுத்த மாதம் (டிசம்பர்) 20ம் தேதி இரவு 10 மணி வரை 30 நாட்களுக்கு அடைக்கப் பட்டு இருக்கும். எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்லுமாறு அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்வே கேட் அகஸ்தீஸ்வரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியில் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது. இந்த கேட் மூடப்பட்டு உள்ளதால் இந்த வழியாக கல்லூரி, பள்ளி மற்றும் கன்னியாகுமரிக்கு அரசு பஸ்கள், மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி பஸ், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.